课程进行中

கரங்களின் சுகாதாரத்திற்கான தரமான முற் பாதுகாப்புக்கள்

提供者 OpenWHO
கரங்களின் சுகாதாரத்திற்கான தரமான முற் பாதுகாப்புக்கள்

பெரும்பாலான சுகாதாரத்துறை சார்ந்த நுண்ணங்கித் தொற்றுக்கள் முறையாக கரங்களின் சுகாதாரத்தைப் பேணுவதன் மூலம் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ளலாம். அதாவது சரியான முறையில் சரியான நேரத்தில் சுத்தம் செய்வதன் மூலம் இதனை மேற்கொள்ளலாம். உலகளாவிய ரீதியில் உலக சுகாதார நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்பட்ட கரங்களின் சுகாதாரம் தொடர்பான வழிகாட்டிகள் சுகாதார சேவையினை மேம்படுத்துவதற்கும் வளப்படுத்துவதற்கும் உதவியாக இருக்கின்றன. அச் செயற்பாடுகளிற்கு உலக சுகாதார நிறுவனத்தின் பல்வகையான பாவிப்பதற்கு ஆயத்தமாகவுள்ள கரங்களின் சுகாதாரத்தினை மேம்படுத்தும் உத்திகள், நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டிகள், வழிகாட்டி உபகரணங்கள் என்பவை உதவி புரிகின்றன. இந்த மொடியூலானது உலக சுகாதார நிறுவனத்தின் மேற்கூறப்பட்ட வழிகாட்டிகள், வழிகாட்டி உபகரணங்கள் என்பவற்றினைத் தொகுத்து வினைத்திறனாக நடைமுறைப்படுத்தலிற்குரிய ஆலோசனைகளை வழங்குகிறது.

கவனிக்கவும்: இந்த பொருட்கள் கடைசியாக 18/01/2022 அன்று புதுப்பிக்கப்பட்டன.

自学
语言: தமிழ்
COVID-19

课程信息

இந்த பாடநெறி பின்வரும் மொழிகளிலும் கிடைக்கிறது:

English- français - Português - العربية - Русский - Español - 中文 - Nederlands - Soomaaliga - Türk - සිංහල - македонски -Shqip - Tetun - қазақ тілі - Հայերեն - ქართული ენა

மீள்பார்வை: சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் கரங்கள் நோயாளியினை பாதுகாப்பாக வைத்திருப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. சுகாதார சேவை உத்தியோகத்தர், ஊழியர்கள் தங்கள் கரங்களினை சரியான தருணத்தில் சரியான முறைகளினைப் பின்பற்றி சுத்தம் செய்யாது இருந்து விடின் அவர்களது விரல்கள் ஒரு நோயாளியில் இருந்து இன்னொரு நோயாளிக்கு நோய் விளைவிக்கும் நுண்ணங்கிகள் பரவலடையச் செய்வதற்கு ஏதுவாக அமைகின்றன. கரங்களின் சுகாதாரத்தினை முக்கியமான தருணங்களில் மேற்கொள்வது ஓர் முக்கியமான சுகாதார நடவடிக்கையாகும். கரங்களின் சுகாதாரத்தினை மேற்கொள்வதானது நுண்ணங்கிகளின் பரவலினைக் குறைப்பதுடன் (நுண்ணுயிர் கொல்லி மருந்துகளிற்கு இறக்காமல் தடை ஏற்படுத்தும் நுண்ணங்கிகள் உட்பட) நோயாளியின் பாதுகாப்பினை அதிகரித்து சுகாதார சேவையுடன் தொடர்புபட்ட(Health Care Associate Infections-HAI) தொற்றினைக் குறைக்கின்றது. வெற்றிகரமான, சரியான தருணத்தில் மேற்கொள்ளப்படும் கரங்களின் சுகாதாரம் நோய்வருமுன் காத்தல்,கட்டுப்பாடு என்பனவற்றின் மூலைக்கல்லாக அமைகின்றது.

கற்றலின் நோக்கம்: இந்தப் பாடநெறியின் இறுதியில் பங்குபற்றுவர் பின்வரும் பின்வரும் விடயங்களைத் கற்றிருத்;தல் வேண்டும்:

  • கரங்களின் சுகாதாரம் கிருமித் தொற்றிலிருந்து வருமுன் காத்தல் மற்றும் கட்டுப்பாடு என்பவற்றிற்கான ஓர் முக்கியமான அம்சம் என்பதனை விபரித்தல்.
  • கரங்களின் சுகாதாரத்துடன் தொடர்புபட்ட 5 தருணங்களினை அடையாளம் காணல்.
  • நோயாளியினை பராமரிப்பதில் கரங்களின் சுகாதாரம் மற்றும் கையுறை பாவித்தல் என்பவை தொடர்பாக கலந்துரையாடல்.
  • உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைக்கு ஏற்ப சரியான முறையில் தண்ணீர், சவர்க்காரமிட்டு கைகழுவும் முறையினை செய்து காட்டுதல்.
  • உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைக்கு ஏற்ப சரியான முறையில் மதுசாரம் அடங்கிய கரங்களில் தேய்த்து கரங்களின் சுகாதாரத்தினை பேணும் பதார்த்தத்தினை பாவிக்கும் முறையினை செய்து காட்டுதல்.
  • ஓர் சுகாதார நிலையத்தில் எழக்கூடிய கரங்களின் சுகாதாரம் தொடர்பான முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்.

பாடநெறியின் காலம்: ஏறத்தாளம் 1 மணித்தியாலம்.

தேர்வுக்குப்: பிந்தைய சோதனைக்கு குறைந்தபட்சம் 70% பெறும் பங்கேற்பாளர்களுக்கு சாதனைக்கான பதிவு வழங்கப்படும். வாசலில் சந்திக்க வரம்பற்ற முயற்சிகள் உள்ளன.வழங்கப்படும். சாதனைக்கான பதிவைப் பெறும் பங்கேற்பாளர்கள் இந்த பாடத்திட்டத்திற்கான திறந்த பேட்ஜையும் பதிவிறக்கம் செய்யலாம். எப்படி என்பதை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

ஆங்கிலத்திலிருந்து இவ் ஆவணங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவையாகும்: Standard Precautions: Hand Hygiene, 2020 .
உலக சுகாதார நிறுவனம் இம்மொழிபெயர்ப்பில் உள்ள உள்ளடக்கப் பிழைகள் அல்லது துல்லியம் என்பவற்றிற்குப் பொறுப்புடையதற்றதாகும். மொழி பெயர்ப்பில் ஏதேனும் வித்தியாசங்கள் ஆங்கிலத்துடன் ஒப்பிடும் பொழுது தமிழில் காணப்பட்டால் ஆங்கில மூலப் பிரதியில் காணப்படுபவையே சரியானவையாக ஏற்றுக்கொள்ப்படும்.

订阅本课程

该课程是免费的。 只需在OpenWHO上注册一个帐户并参加课程!
现在注册吧

证书要求

  • 课程证书 授予者需要至少取得课程总分的百分之 70%
  • 完成课程可获得开放徽章